Friday, November 10, 2006

தேடிக் கொண்டிருக்கிறேன்





தேடிக் கொண்டிருக்கிறேன்.. யுகங்களாய்..
எதையென்று தெரியாமல்..

வெறுமையின் விளிம்பில் நான்
வெற்றிடத்தை எது நிரப்பக் கூடும்..

கனவுகள் கண்டு எழுந்ததாய் உணர்ந்தேன்..
இதுவும் ஓர் கனவோ..

காணும் காட்சிகள்
கண்முன் கலைந்து போக
வந்த வழி மறந்து போனது...
போகும் திசை தேடுகிறேன்..

எது தொலைந்தது..
எதை தேடிய பயணம் இது..
என்று புறப்பட்டேன்..
கடந்த தொலைவினால்
கதறும் கால்கள்..

மீண்டும் மீண்டும் அதே பாதை
தொடங்கிய இடத்திற்கு திரும்பி
தொடரும் பயணம்..

தேடிக் கொண்டிருக்கிறேன்.. யுகங்களாய்..
எதையென்று தெரியாமல்..





3 Comments:

Blogger வலைஞன் said...

அது யாருங்க புதுசா ஒரு வலைஞன்?

நானு ஒரு மூணு வருசமா இங்க இருக்கனுங்க

நம்ம பேர்ல இருகற பதிவுகள்

http://akaravalai.blogspot.com/

http://ava-1.blogspot.com/

அகரவலையை தற்காலம் மூடிவிட்டாலும் தொடர்கதை இப்பவும் தொடருதுங்க...

-வலைஞன்

11:46 PM  
Blogger வலைஞன் said...

பெயரை மாற்றிய சாத்வீக நண்பருக்கு நன்றி

6:09 AM  
Blogger ஜி said...

என்ன சாத்வீகன். சம்பந்தமே இல்லாத இன்னொரு முகம்.

11:28 PM  

Post a Comment

<< Home