கதவிலக்கம் 28
கடக்காமல் நின்றன
கால்கள்
கதவிலக்கம் 28
நானாக வரவில்லை
போகும் வழிதான்
வேறுவழி போயிருக்கலாம்..
நின்று முகம் தேடுகிறேன்..
நீ இருக்கிறாயா என்று..
மறுதலித்த பின்பும்
மறக்காத நெஞ்சம்..
அணில் குதித்த
சத்தத்தில் அதிர்ந்து
அகன்று போகின்றேன் நான்..


3 Comments:
"நின்று முகம் தேடுகிறேன்..
நீ இருக்கிறாயா என்று..
மறுதலித்த பின்பும்
மறக்காத நெஞ்சம்..
அணில் குதித்த
சத்தத்தில் அதிர்ந்து
அகன்று போகின்றேன் நான்.."...
அற்புதம்!... காதலின் ஏக்கம் அழகான கவி வரிகளில்.
வாழ்த்துக்கள்.
மிக அழகான அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.
/*அணில் குதித்த
சத்தத்தில் அதிர்ந்து
அகன்று போகின்றேன் நான்*/
அருமையான வரிகள் சாத்வீகன்...வாழ்த்துக்கள் தொடருங்கள்
Post a Comment
<< Home