Friday, November 10, 2006

தாழ்வு மண்டலம்



காத்திருந்தேன்..
கண்டு கொள்ளாது..
கடந்து சென்றாய்..
என்னுள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்..

சேதாரங்களை சரிசெய்து
காத்திருக்கிறேன்..
மீண்டும் வந்து
கரை கடப்பாய் என்று..


1 Comments:

Blogger Unknown said...

/சேதாரங்களை சரிசெய்து
காத்திருக்கிறேன்..
மீண்டும் வந்து
கரை கடப்பாய் என்று../

மிக அழகான கற்பனை. அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

11:34 PM  

Post a Comment

<< Home