Saturday, November 11, 2006

உனது இன்மை

உனது இன்மை

அந்தி சாய்ந்ததும்
ஆளரவமற்ற தெருக்கள்
அடிக்கும் குளிர்காற்று
உடலை கிழிக்க
உள்ளம் கிழிக்கும்
உனது இன்மை...

உறையும் பனியில்

இலைகளின் இறுதி ஊர்வலத்தின்
மீது ஊர்ந்து வந்தது
குளிர் காலம்
உறையும் பனியில்
உனக்காக உருகும் உள்ளம்.



வழியெங்கும்

வழியெங்கும் வாடிய இலைகள்
வண்ணமிழந்து குப்பையாய்
உன்னை எண்ணி
எண்ணமிழந்த
என்னைப் போல....

4 Comments:

Blogger Unknown said...

/வழியெங்கும் வாடிய இலைகள்
வண்ணமிழந்து குப்பையாய்
உன்னை எண்ணி
எண்ணமிழந்த
என்னைப் போல..../
மிக அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

11:26 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி தாரிணி

வந்தமைக்கும், வாசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்...

11:47 PM  
Anonymous Anonymous said...

வழியெங்கும்
வாடிய இலைகள்
வண்ணமிழந்து
குப்பையாய்
உன்னை எண்ணி
எண்ணமிழந்த
என்னைப் போல..
என்னைப் போல....

மிக மிக அருமை

2:14 PM  
Blogger நவீன் ப்ரகாஷ் said...

//இலைகளின் இறுதி ஊர்வலத்தின்
மீது ஊர்ந்து வந்தது
குளிர் காலம்
உறையும் பனியில்
உனக்காக உருகும் உள்ளம். //

//வழியெங்கும் வாடிய இலைகள்
வண்ணமிழந்து குப்பையாய்
உன்னை எண்ணி
எண்ணமிழந்த
என்னைப் போல.... //

சருகுகளாய் நினைவுகளை கோர்த்தமை நன்று சாத்வீகன் ரசித்தேன் :))

12:24 AM  

Post a Comment

<< Home