வானவில்லாய் வந்தவள்
வானவில்லாய்
வானவில்லாய் என் வானில்
வந்தாய்...
மனம் மகிழாமல்
வருத்தம் கொண்டது..
வானவில் போல் விரைந்து
கலைந்து போவாய் என..
நான்.......
அவள் காதலை
யாசித்தவன்
அவள் பெயரை
சுவாசித்தவன்
அவள் வழித்தடங்களில்
வசித்தவன்
அவள் நெஞ்சை
நேசித்தவன்
அவள் ஒருகவிதையென
வாசித்தவன்
.......
நான் தொலைந்து
அவளாய் ஆனவன்......


<< Home