மண்ணிறங்கிய தேவதை
நீ இல்லாத நாட்கள்
நீண்டு கொண்டு இருக்கின்றன..
நீர்கொண்ட மேகமென பொழிந்த
நினது அன்பில்
நனைந்தவன் நான்..
உனது பெயரை
உன்னெதிரெ
உச்சரிக்க முடியாத
உதடுகள்..
உள்ளுக்குள் உயிர்வதை..
உயிர்ப்பிக்க உடனே வா..
பிரிவு என்
பிரியத்தை பிரிக்கவில்லை..
பிறரரியாமல் பிளந்து
பரிதவிக்கும் பித்தமனம்..
பிரியவிருக்கும் உயிர்
பிடித்து நிறுத்த பறந்து வா..
மண்ணிறங்கிய தேவதையாய்
மனதில் நிறைந்தவளே..
மின்னி மறைந்து
நின்றாய்
மீளாத்துயரில் நான்
மீட்பதற்காய்
மீண்டும் வா....


<< Home