இலவசமாய் ஓர் இதயம்..
உனக்காக இதோ
இலவசமாய் ஓர் இதயம்..
இதயம் தந்து
இதயம் கொள் என்று
இடமாற்றம் செய்யவில்லை..
உன் காதலை வேண்டி
இதை தரவில்லை..
இலவசத்தின் பின்
மறைந்திருக்கும் ஏதும்
இதிலில்லை...
முற்றிலும் இலவசம்.
மறுத்தாலும் வெறுத்தாலும்
இது உனக்கே உனக்கென..
உறுதியுண்டு
உத்தரவாதமுண்டு
உடனே கொள்வாய்.
என்னுள் இழைந்தவளே
இதம் தந்து
இன்னுயிரில் கலந்து
இறுகி இறுதிவரை
இவள் என்னவளென
உள்ளெழுந்த உணர்வால்
இது உனக்கு சமர்ப்பணமாய்..


6 Comments:
கவிதைகளுக்காக ஒரு வலைப்பதிவும் அழகான கவிதைகளும் நல்ல முயற்சி.
கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை..
வாழ்த்துக்கள்!!!
போட்டியில் வெற்றி பெறவும் +
இலவசமாய் உங்கள் இதயத்தை பெறுபவருக்கும்!!! :))
நல்ல கவிதை..
வார்த்தை ஜாலங்கள் அழகு, ஆனால், இலவசமாய் ஒரு இதயம் என்பதுதான் சற்று 'இணைக்கப்பட்ட' வரி போல், யதார்த்தமாய் இல்லாதது போல் படுகிறது.
வாழ்த்துக்கள்.
arumaiyooo arumai...
Post a Comment
<< Home