மழலையர் தினம்
கான்வென்டில் சேர்த்துவிட்டு
கனவு காணும் பெற்றோர்..
இரண்டாம் வகுப்புக்கு
இருபதாயிரம் வாங்கும் பள்ளிகள்..
கொதிக்கும் வெயிலில்
ஷூ அணிந்து
டை இறுக்கி
ஆட்டோக்களில் அடுக்கப் படும்
இளந்தளிர்கள்...
வருடம் முழுதும்
பொதியேறிய முதுகுகளுக்கு
இன்றாவது ஓய்வு...
காந்தியாய், நேருவாய்
வேடமணிந்து
விழிக்கும் சிறுவர்கள்...
திணித்தல் தொடருமட்டும்
குழந்தைகள் தினத்தில்
அர்த்தம் இல்லை...


4 Comments:
சாத்வீகன்,
திணித்தல் வெளியில் மட்டும் நடப்பதில்லை!!!
எல்லாப் பெற்றோருமே தங்களுடைய ஆசைகளையும் விருப்பங்களையும் தானே தங்கள் பிள்ளைகளின் மனங்களில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்!!!
கற்பித்தலைக் காணவில்லை;
திணித்தல்தான் தினந்தோறும்!
அருமையான கவிதை
அருமையான கவிதை,
Post a Comment
<< Home