Monday, November 13, 2006

விழியில் வழிந்த நீர்

விடை பெற்றுப் போகின்றேன்
உனது
விழியில் வழிகிறது நீர்..
விரைவில் சந்திப்போம்
என்று தெரிந்த பின்னும்..

உன் கண்ணீர் முத்துக்களை
சேர்த்து எடுத்து
என் நினைவு நூலால்
கோர்த்து செல்கின்றேன் நான்..

மீண்டும் ஒருமுறை
என் பிறப்பெனில்
உன் கண்ணீராக...
உன் இதயத்தில்
உருப்பெற்று..
கண்ணில் கசிந்து
கன்னம் தடவி
உதட்டில் உயிரிழப்பதற்காய்....

5 Comments:

Blogger Sivabalan said...

//உதட்டில் உயிரிழப்பதற்காய்....//

Good One!!

11:34 AM  
Blogger Sivabalan said...

//உதட்டில் உயிரிழப்பதற்காய்....//

Good One!!

11:34 AM  
Blogger சத்தியா said...

"மீண்டும் ஒருமுறை
என் பிறப்பெனில்
உன் கண்ணீராக...
உன் இதயத்தில்
உருப்பெற்று..
கண்ணில் கசிந்து
கன்னம் தடவி
உதட்டில் உயிரிழப்பதற்காய்...."...

ம்... நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்!

6:22 PM  
Blogger சீனு said...

nalla karpanai...arumai...

10:46 PM  
Blogger சீனு said...

nalla karpanai...arumai...

10:46 PM  

Post a Comment

<< Home