Monday, November 20, 2006

காதல் முறித்தாய்



உன்னிடம் என்காதல் நெஞ்சை திறந்தேன்
எல்லை தாண்டியதின் அச்சம் என்னுள்
பயந்தது நடந்தது இதயம் அறுத்தேகினாய்
விருப்பு இல்லை வெறுப்பு மட்டுமென்றாய்

காதல் முறித்தாய் காரணம் அடுக்கினாய்
நேசம்கொள எதுவுண்டு உன்னிடம் என்றாய்
இதயம் இருதுண்டாக இன்னுயிர் கிழித்தாய்
என்சொல் யாவும் கேட்காது தவிர்த்தாய்

உள்ளம் நிறைந்த காதல் உண்டென்றேன்
உலகில் வாழ அதுபோதா தென்றாய்
உயிருருக உள்ளம் உடத்து சென்றாய்
உன்னை அகன்று யாது செய்வேன்

விட்டு விலகி நின்றேன் நானும்
விடை கொடுத்தேன் சென்று வாவென
இன்று செல்கின்றாய் என்னை தனியனாக்கி
இனிசெய்வது யாதென திகைக்கும் எனைநீங்கி

என்காதல் உண்மை அதுஎன்றும் காட்டாறு
நீயின்றியும் நினைவு ஊற்றில் நீடித்திருக்கும்
என்றேனும் உன்இறுகிய இதயம் திறக்கும்
காத்திருக்கும் என்காதல் அதைதிறக்க வைக்கும்

திரும்பி வருவாய் நம்பிக்கை என்னுள்
திசைபார்த்து நிற்கிறேன் நீவர வேண்டி
வரும்வழி யெங்கும் பூத்தூவி நின்றேன்
காதல் நிஜமெனில் கட்டாயம் வருவாய்





3 Comments:

Blogger சீனு said...

arumaiyena kadhal kavithai...

10:38 PM  
Anonymous Anonymous said...

திரும்பி வருவாய் நம்பிக்கை என்னுள்
திசைபார்த்து நிற்கிறேன் நீவர வேண்டி
வரும்வழி யெங்கும் பூத்தூவி நின்றேன்
காதல் நிஜமெனில் கட்டாயம் வருவாய்

nice

11:56 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி சீனு.
நன்றி காண்டீபன்.

10:22 PM  

Post a Comment

<< Home