Monday, December 18, 2006

காணாமல் தேடும் கண்கள்



காத்திருத்தலில் கரையும் காலம்
தொலைவில் நீ...
பார்த்திருக்கிறேன் நீ வரும் வழியை..
எனது விளக்கு எரிந்து
கொண்டிருக்கிறது..
நீ வந்து அணைப்பதற்காய்.

உனது தாமதம்
கோபம் சேர்த்தது எனக்கு..
அடுத்த நிமிடம் காரணம்
கற்பித்து சமாதானம்

கொள்ளும் ஓர் மனம்..
ஏதேனும் உனக்கு உற்றதோ
என்று அலறும் ஓர் மனம்..

நேரம் செல்ல
பதற்றம் மட்டும்..
காணாமல் தேடும்
கண்கள்..

நேரம் தவறி வந்து
சேர்ந்தாய்..
உன் முகம் கண்டதும்
முகத்தில் தோன்றிய

ஒரு புன்னகை,
மறுகணம் மறைத்தேன்..

காக்க வைத்து
அலைக்கழித்த உன் மேல்
பொங்கிய கோபம்..
குறும்பன் நீ..
கோபத்தையும் சேர்த்தணைத்தாய்.


10 Comments:

Blogger ஜி said...

சூப்பர். நான் முதல்ல ஒரு பையன் கண்ணோட்டத்துல இருந்து படிச்சேன். 'குறும்பன் நீ', அப்டீன்னு ஒரு மேட்டரப் போட்டு மாத்திட்டீங்க...

தல.. காக்க வைக்கிறது பொண்ணுங்க... பசங்க இல்ல :)

11:23 PM  
Blogger Venkata Ramanan S said...

a gud 1 sir

1:10 AM  
Blogger Venkata Ramanan S said...

a gud 1

1:10 AM  
Blogger Venkata Ramanan S said...

gud 1

1:11 AM  
Blogger சத்தியா said...

ம்...
காணாத போது
கொப்பளிக்கும் கோபம்...

கண்டவுடன்
பனியாய் உருகும்!

8:28 AM  
Blogger ப்ரியன் said...

/*குறும்பன் நீ..
கோபத்தையும் சேர்த்தணைத்தாய். */

இவ்வரிகளில் அழகாகிறது கவிதை வாழ்த்துக்கள் சாத்வீகன்.

8:33 AM  
Blogger சாத்வீகன் said...

வாருங்கள் ஜி

தனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள் வீட்டில் என்பது ஆணுக்கும், தனக்காக ஒருவன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பது பெண்ணிற்கும் ஒருவர் மீது மற்றவர்க்கு அன்பை அதிகரிக்கும் ஒன்று.

வெளியில் சென்ற கணவனுக்காக காத்திருக்கும் பெண்ணின் நிலையே இங்கு.. கவிதையாக...

வருகைக்கு நன்றி.

9:43 AM  
Blogger சாத்வீகன் said...

வாருங்கள் ரமணன்,
எந்த ஒரு செய்தியையும் மூன்று முறை சொன்னால் அது முற்றிலும் உண்மையாகிறது.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

9:44 AM  
Blogger சாத்வீகன் said...

வருகைக்கு மிக்க நன்றி சத்தியா.

9:45 AM  
Blogger சாத்வீகன் said...

பிரியன்,
கவிதை வரிகளை சிலாகித்தமைக்கு மிக்க நன்றி.

9:47 AM  

Post a Comment

<< Home