கணைகள் ஏனடி நீ தொடுத்தாய்

வீழ்ந்து கிடக்கின்றேன்
வில் ஏன் கொணர்ந்தாய்..
என்னை வென்றவள் நீ..
அன்பால் அடிபணிந்தேன்..
என்னை அழிக்க
உன் அழகு போதும்..
அம்புகளால் என் செய்வாய்.
உன் புருவ நெறிப்பில்
புலம் பெயர்ந்தது என் இதயம்
ஆயுதம் தரித்து
நீ புரியக்கூடியது யாது.
கூரிய விழியம்பு போதாதா.
வில்லம்பு ஏன் விடுத்தாய்.
காதலால் விழ காத்திருக்கிறேன்
கணைகள் ஏனடி நீ தொடுத்தாய்.
வெள்ளுடை தேவதையே
உள்ளம் கொள்ளை கொண்டாய்.
வேறு எது கொள்ள
எண்ணம் படைத்தாய்.
அழகே உனக்கு அபயம் நான்.
அருள் கூர்ந்து அன்பு செய்வாய்.


2 Comments:
//அழகே உனக்கு அபயம் நான்.
அருள் கூர்ந்து அன்பு செய்வாய்//
சாத்வீகன்
நல்ல கவிதை.
இறுதி வரிகள் கொஞ்சம் பாருங்கள்!
இவ்வளவு நேரம் அவளிடம் தஞ்சம் கொண்டு, இறுதியில் உனக்கு அபயம் நான் என்கிறீர்களே!
ஒருகால் அது தான் கவிதையின் மறைபொருளோ? :-)
ரவிஷங்கர்
உனக்கு அபயம் நான் என்றால் உன்னிடம் அபயமாய் நான் புகுந்தேன் என்று பொருள்.
மாற்றி பொருள் கொண்டீர்கள். :)
வருகைக்கு நன்றி.
Post a Comment
<< Home