இது கவிதையல்ல
எழுத துவங்குகிறேன்
கவிதையொன்றை...
கசக்கி எறிந்த
காகிதங்களின் குப்பை மேட்டில்...
என்னையும் கசக்கி விடாதே
காகிதத்தின் கோரிக்கை
கடந்து செல்கிறது என்னை...
மீண்டும் ஏதோ எழுதுகிறேன்
நிச்சயமாய்
இது கவிதையல்ல
உன்னோடு ஒப்பிட்டால்...
சில சமயம் கவிதைகள் என்னால் பின்னப்பட்டு.. சில சமயம் நான் கவிதைகளால் பின்னப்பட்டு...
பத்து நிமிடம்
கான்வென்டில் சேர்த்துவிட்டு
விடை பெற்றுப் போகின்றேன்
நானறியாமல்
உனக்காக இதோ
கனவினில் கண்ட முகம்
வெளியே நிற்கிறேன்..
நீ இல்லாத நாட்கள்
அவள் காதலை
யாசித்தவன்
அவள் பெயரை
சுவாசித்தவன்
அவள் வழித்தடங்களில்
வசித்தவன்
அவள் நெஞ்சை
நேசித்தவன்
அவள் ஒருகவிதையென
வாசித்தவன்
.......
நான் தொலைந்து
அவளாய் ஆனவன்......
உனது இன்மை
உன்னை கண்ணுறும்போது
கடக்காமல் நின்றன
ஒவ்வொரு செயலுக்கும்